கம்பிவேலி அமைக்க கோரிக்கை

Update: 2026-05-10 13:10 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் காலனி தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள சிலர் நினைத்த நேரத்தில் தண்ணீரைத் திறந்து குளிப்பது, மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துவது போன்றவைகளை செய்து வருகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் தொட்டியில் இருந்து தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்