விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-05-10 11:20 GMT

அரியலூர் முதல் வி.கைகாட்டி, ஸ்ரீபுரந்தான், முத்துவாஞ்சேரி, காரைக்குறிச்சி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. பழைய சாலையில் தேங்கியுள்ள சுண்ணாம்புகள், மண்களை அகற்றாமலும், சாலையின் இரு புறமும் 100 மீட்டருக்கு முன்பு சாலை அமைக்கும் பணி நடைபெறுவது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை. இந்த சாலையில் சாலை சீரமைக்கும் பணியை துளியளவும் மதிக்காமல் டிப்பர் லாரிகள் தாறுமாறாக செல்கிறது. மேலும் சாலையின் ஓரப்பகுதியில் மண் மூட்டையில் சிகப்பு நிற பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டிய பைப்பிற்கு இடையே அதிகளவில் மண்கள் தேங்கியுள்ளது. மழை பெய்யும் போது சாலையில் தேங்கியுள்ள சுண்ணாம்புகள், மண்கள் வழுக்கி விடுகிறது. லாரிகள் வேகமாக செல்லும்போது தேங்கியுள்ள மண்கள் காற்றில் பறப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்