பயணிகள் அவதி

Update: 2026-05-10 11:11 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கும், பக்கத்து மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த பஸ் நிலையம் எப்போதும் பொதுமக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் இந்த பஸ் நிலையத்தில் போதிய கழிவறை வசதிகள் இல்லை. மேலும் இரவு நேரங்களில் இங்குள்ள கழிவறைகளை பூட்டு போட்டு பூட்டி விடுகின்றனர். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பெண்கள் உள்ளிட்ட பயணிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த பஸ் நிலையத்தில் போதிய கழிவறை வசதிகள் ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்