வாகனஓட்டிகள் அச்சம்

Update: 2026-05-10 10:00 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் வாலிபர்கள் சிலர் தங்களது மோட்டார்சைக்கிள்களில் வினோத ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பொருத்தி அதிவேகத்தில் செல்கின்றனர். இவர்களால் சாலையில் பயணிக்கும் நடைபாதையினர், வாகனஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் நிலவுகிறது. இவ்வாறு அதிவேகத்தில் பயணிப்பவர்களால் வாகனஓட்டிகள் சிறு, சிறு விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்