ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் தெருநாய்கள் தொல்லை கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. இந்த தெருநாய்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் சாலையில் செல்லும் நடைபாதையினரை துரத்தி சென்று கடிக்கின்றன. எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமா?