ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளின் ஓரங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் துர்நாற்றத்தால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.