அரூர் பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. பன்றிகள் அடிக்கடி பெரியார் நகர், பைபாஸ் சாலை, வர்ணதீர்த்தம், திரு.வி.க.நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுற்றி திரிவதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயத்தில் உள்ளனர். மேலும் பன்றிகளால் வாகன விபத்துகள் ஏற்படும் சூழலும் உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.