அரியலூர் வட்டம் பூக்கார தெருவில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை அங்குள்ள கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துகின்றன. மேலும் அவ்வழியாக செல்லும் சிறுவர், சிறுமிகளை அச்சுறுத்தி வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.