கோத்தகிரி பகுதியில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவை பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளன. எனவே வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும்.