குரங்குகள் தொல்லை

Update: 2026-04-26 16:36 GMT
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை அப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து பொருட்களை சூறையாடிச்செல்கிறது. மேலும் விரட்ட வரும் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்