ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வேந்தோணி பஞ்சாயத்து நெசவாளர் காலனி தெருவில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் பயணிக்கும் நடைபாதையினர், வாகனஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் சிறுவர்கள், பெண்கள் தங்களது வீட்டைவிட்டு வெளியே வர அச்சடைகின்றனர். எனவே தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.