ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா?

Update: 2026-03-08 16:26 GMT

ஈரோடு காரணாம்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை வழியாக கரூர் மாவட்டம் புகளூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. புகளூர் வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்ணீர் நிறுத்தப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பராமரிப்பு பணிகள் முடியாமல் தண்ணீர் திறக்கப்பட்டதால், பாலத்துறை பகுதியில் உள்ள பாலத்தில் ஏராளமான ஆகாயத்தாமரைகள் தேங்கி நிற்கிறது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள ஆகாயத்தாமரைகள் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்