அரியலூர் மார்கெட்டுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து காய்கறிகள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் மார்கெட் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அங்கு காய்கறி வாங்க வரும் முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை பார்த்து குரைத்து அச்சுறுத்தி வருகின்றன. இதனால் அவர்கள் அச்சத்துடனேயே மார்கெட்டுக்கு வந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.