சட்டவிரோத மது விற்பனை

Update: 2026-03-08 10:47 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் செந்துறை அருகே மருதூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகே சிலர் சட்டவிரோத மது விற்பனை மற்றும் புகையிலை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மதுப்பிரியர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் வைத்து மது அருந்துகின்றனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குறிப்பாக மாணவர்கள் மற்றும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மது மற்றும் புகையிலை விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்