‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-03-08 10:46 GMT

கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் வேலாயுதம்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் பஸ் நிறுத்தம் உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் அதிகளவு பயணம் செய்யக்கூடிய கரூர் செல்லும் நகர பஸ்கள் இந்த பஸ் நிறுத்தத்தில் தான் நின்று செல்லும். இந்நிலையில் இந்த பஸ் நிறுத்த நிழற்குடையின் மேற்கூரையில் வெடிப்பு ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனை சரிசெய்ய வேண்டும் என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்