புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் அம்மா பஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நாகப்பட்டினம், ராமநாதபுரம், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மணமேல்குடி வழியாக செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிலையத்தில் நின்று செல்வதில்லை. இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இவ்வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் அம்மா பஸ் நிலையத்தில் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.