புதுக்கோட்டை மாவட்டம் பெரியார் நகர், கம்பன் நகர், கீழராஜவீதி பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவில் தூங்குவதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.