பூட்டியே கிடக்கும் ஆஸ்பத்திரி கட்டிடம்

Update: 2026-02-15 14:42 GMT

உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் விபத்து அவசர பிரிவுக்கு என்றே புதிதாக கட்டிடம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கட்டிடத்தில் தேவையான மருத்துவ உபகரணங்கள் வைக்கப்படவில்லை. அந்த பிரிவில் பணியாற்ற டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்படாமல் கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. இதனால் விபத்தில் படுகாயமடைந்து ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும் செய்திகள்