பராமரிக்கப்படாத கழிப்பிடம்

Update: 2026-02-08 18:35 GMT

தொண்டாமுத்தூர் அருகே தாளியூரில் காந்தி காலனியில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தை அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கழிப்பிடம் போதிய பராமரிப்பில் இல்லாமல் உள்ளது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்துவோருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்