வியாபாரிகள் அவதி

Update: 2026-02-08 15:09 GMT

அந்தியூர் வாரச்சந்தையில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதன் நுழைவுவாயில் பகுதியில் கடைகள் வைப்பதற்கு இடையூறாக மண் குவியலாக கிடக்கிறது. இதனால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் அவதிப்படுகின்றனர். இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மண் குவியலில் சறுக்கி கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கு முன் மண் குவியலை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்