'தினத்தந்தி'க்கு நன்றி

Update: 2026-01-11 10:45 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் யூனியன் வெளியாத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை என்று சில நாட்களுக்கு முன்பு தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் தெருவிளக்குகள் சரி செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எனவே தங்கள் கோரிக்கையை நாளிதழில் வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்