போக்குவரத்து நெரிசல்

Update: 2026-01-11 10:40 GMT

கூடலூர் நகரின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் தடுப்புக்கற்கள் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல கூட வழி கிடைப்பது இல்லை. இதனால் நோயாளிகள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் வாகன ஓட்டிகளும் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். அவசர நேரத்தில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த கூட இடம் கிடைப்பது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புக்கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்