கூடலூர் நகரில் ரூ.1 கோடி செலவில் நகர்புற சுகாதார நிலைய கட்டிடம், கோர்ட்டு கட்டிடத்துக்கு பின்புறம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் அந்த புதிய கட்டிடம் பழுதடைந்து வீணாகும் நிலை காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.