விபத்து அபாயம்

Update: 2025-11-23 09:18 GMT

பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே வைக்கப்பட்டுள்ள மின்சார பெட்டியை சுற்றி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் இருக்க கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த கம்பி வேலி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த கம்பிவேலியை அகற்றி விட்டு புதிய தடுப்புகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்