விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி தெரு பகுதிகளில் சாலையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிவதோடு சில கால்நடைகள் சாலையில் ஆங்காங்கே படுத்து தூங்குவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, விபத்துகளையும் சந்திக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.