கொசுத்தொல்லை

Update: 2025-11-09 14:08 GMT

அரியலூர் நகரில் உள்ள பாரதியார் நகர் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கொசுக்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் அதிகம் உள்ள இந்த பகுதியில் கழிவுநீர் வாய்க்கால்கள் மற்றும் குப்பைகள் அதிகம் உள்ளதால் அதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அதிகம் பரவுகின்றன. இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்