கோபியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ள பார்வதி நகரில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருநாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்வதால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள், குழந்தைகள் அச்சப்படுகின்றனர். நாளுக்கு நாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.