நாகர்கோவில்-மிடாலம் தடத்தில் இயங்கும் 7-7‘எப்’ பஸ் இரு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. இந்த பஸ் திங்கள்நகர், குளச்சல் வழியாக எண் 7 என ஒரு வழித்தடத்திலும், மற்றொரு வழித்தடமாக திங்கள்நகர், திக்கணங்கோடு, கருங்கல் வழியாக 7 ‘எப்’ எனவும் இயக்கப்படுகிறது. இதில் பலமுறை இரு வழித்தடங்களுக்கும் தடம் எண் குறிப்பிடாமல் டிஜிட்டல் போர்டில் மிடாலம்-நாகர்கோவில் என பதிவிட்டு இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. செய்தி வெளியிட்ட அன்றே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ்சின் டிஜிட்டல் பலகையை சரிசெய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
-ஆகாஷ், கருங்கல்.