புத்தேரி பாறையடி பகுதியில் உள்ள தெருக்களில் பொதுமக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கம். இந்த தெருக்களில் சமீபகாலமாக தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால், அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பெண்கள், வாகன ஓட்டிகளையும் நாய்கள் விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதும் வாடிக்கையாக உள்ளது. இதன்காரணமாக ஒருவித அச்சத்துடனேயே அந்த வழியாக பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். பலர் அடிக்கடி விபத்திலும் சிக்கி காயமடைகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடக்க வேண்டும்.
-லாரன்ஸ், பாறையடி.