கோபிசெட்டிபாளையம் கரட்டூர் வளைவு முதல் நல்லகவுண்டம்பாளையம் வரை 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆக்கிரமிப்புகள் சரியாக அகற்றப்படவில்லை. சாலையில் வைக்கப்பட்ட விளம்பர பலகைகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்துகளை தடுக்க முன்வருவார்களா?