மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரத்தில் ஊர்புற நூலகம் உள்ளது. இந்த நூலகம் அங்குள்ள பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் கட்டிடத்துக்குள் மழைநீர் கசிந்து புத்தகங்கள் நனைந்து வீணாகின்றன. இதன்காரணமாக வாசகர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்தை மாற்று கட்டிடத்துக்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.