கோபி அருகே மொடச்சூரில் உள்ள நகராட்சி வணிக வளாக கட்டிடம் பழுதடைந்து காணப்படுகிறது. மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் நகராட்சி வணிக வளாக கட்டிடத்தை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.