மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் ஆக்கூர் உள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஆக்கூர் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை இயங்கி வந்தது. இதனால் ஆக்கூரை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக வாரச்சந்தை இயங்காமல் இருந்து வருகிறது. இதன்காரணமாக ஆக்கூரை சுற்றியுள்ள கிராம மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மீண்டும் ஆக்கூர் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை இயங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.