அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் இங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெயங்கொண்டம் அல்லது 8 கிலோ மீட்டர் தொலையில் உள்ள ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் இருந்தான் தீயணைப்பு வாகனங்கள் வர வேண்டியது உள்ளது. ஆனால் தீயணைப்பு வாகனம் வருவதற்குள் பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஆண்டிமடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.