கோபி பெருந்தலையூர் அருகே உள்ள குட்டிபாளையம் ஆதிதிராவிட காலனி பகுதியில் கிணறு திறந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் விளையாடும் சிறுவர்-சிறுமிகள் தவறி கிணற்றுக்குள் விழ வாய்ப்புள்ளது. அதற்கு முன் கிணற்றின் மீது மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.