பயணிகள் நிழற்குடை

Update: 2025-02-09 16:27 GMT

 ஈரோடு- பூந்துறை சாலையில் கஸ்பாபேட்டை 4 ரோடு சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பல ஊர்களில் இருந்து பயணிகள் வந்து பஸ் ஏறி செல்கிறார்கள். ஆனால் இங்கு பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கால்கடுக்க காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்