கோபியில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் கரட்டடிபாளையம் செல்லும் பாதையில் ஒரு தோட்டத்து பகுதியில் தீயணைப்பு நிலையம் உள்ளது. தற்போது கோபியில் போக்குவரத்து நெரிசல் உள்ளதால் தீப்பிடித்தால் கோபி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு தீயணைப்பு வாகனம் விரைவில் வர முடியாத நிலை உள்ளது. எனவே கோபி மைய பகுதியில் அமைந்துள்ள பெரியார் மைதானத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டை மாற்றி அங்குள்ள பாலத்தின் அருகே தீயணைப்பு நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.