தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் இந்திராகாந்திவீதியில் சிவன் கோவில் எதிரே குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் முறையான பராமரிப்பின்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. படித்துறைகளும் சேதமடைந்து இருக்கிறது. புதர்மண்டி இருப்பதால் குளம் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்திராகாந்திவீதியில் உள்ள குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.