கோபி அருகே மேவானி ஊராட்சியில் ஆற்றுக்கு செல்லும் வழியில் பெரிய குழி காணப்படுகிறது. இதனால் ஆற்றுக்கு செல்பவர்கள் தவறி குழிக்குள் விழுந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேலும் அந்த பகுதியில் மின்விளக்கும் பழுதடைந்து பல மாதங்கள் ஆகிறது. இதனால் அந்த பகுதி இருட்டாக இருப்பதால் அந்த வழியாக செல்ல பெண்கள், சிறுவர், சிறுமிகள் அச்சப்படுகின்றனர். உடனே அந்த குழியை மூடி உயிரிழப்பை தடுக்கவும், மின்விளக்குகளை சரிசெய்து பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.