விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நான்கு வழிச்சாலை படந்தால் விலக்கு பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்து நிலையில் உள்ளது. இதனால் பயணிகள் அதை பயன்படுத்த மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியின் அருகே உள்ள சாலையும் சேதமடைந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்படுக்கின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?