அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சிதம்பரம் ரோட்டில் பழைய குறவன் குடிசை இருந்த இடத்தில் நூலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.இருப்பினும் அந்தப் பணி தற்போது ஆமை வேகத்திலேயே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நூலக கட்டிடம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு போதிய வசதிகள் இல்லாமல் வாசகர்கள் சிரமப்பட்டு வருகின்றனர், எனவே புதிதாக கட்டப்பட்டு வரும் நூலக கட்டிடத்தை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.