ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. ஆனால் இந்த கோவில் உள்ள பகுதியில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற ஊர் பெயர் பலகை இல்லை. இதனால் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் எந்த ஊர் என்று தெரியாமல் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிரகதீஸ்வரர் கோவில் உள்ள பகுதியில் இருபுறமும் கங்கைகொண்ட சோழபுரம் என பெயர் பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.