விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள கண்மாய்களை ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் கண்மாயில் முழுக்கொள்ளளவு நீரை சேமிக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். மேலும் கண்மாய்களில் கழிவுநீரும் கலக்கிறது. எனவே கண்மாயில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?