மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் பகுதி அபிஷேகக்கட்டளை கிராமத்தில் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்கள், செல்போன்களை எடுத்து செல்கின்றன. மேலும், சாலையில் அங்கும், இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.