புதுக்கோட்டை திருவரங்குளம் சிவன் கோவில், கடைவீதி பிடாரி அம்மன் கோவில், கே.வி.எஸ். நகர் தெற்கு ரத வீதி, கிட்டக்காடு ஒன்றிய அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பாரதியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை இந்த வழியாக செல்பவர்களை கடிக்க பாய்வதுடன், இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.