சுகாதார சீர்கேடு

Update: 2023-12-31 10:43 GMT

கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் பகுதியில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தில் ஆண் பிரிவில் 8 கழிப்பறைகள் உள்ளன. இதில் 6 கழிப்பறைகளில் கதவு இல்லை. அதோடு எந்த கழிப்பறையும் சுத்தமாக இல்லை. அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்