நடுரோட்டில் திடீர் குழி
திருப்பூர் செல்லாண்டியம்மன் துறை அருகே வளம் பாலம் உள்ளது. இந்த பாலத்தில் இருந்து ஊத்துக்குளி ரோடு ெசல்லும் வழியில் மின்மயானம் அருகே நடுரோட்டில் திடீர் குழி ஏற்பட்டுள்ளது. பார்ப்பதற்கு சிறிய குழியாக இருந்தாலும் இதன் ஆழம் அதிகமாக உள்ளது. இவ்வழியாக தினமும் அதிக அளவிலான வாகனங்கள் வந்து சென்றவண்ணம் இருப்பதால் இந்த குழி நாளுக்கு நாள் பெரிதாகும் வாய்ப்பு உள்ளது. ரோடு பெரிய அளவில் சேதமடையும் வரை காத்திருக்காமல் ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர். தற்போது குழி உள்ள இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடாக கம்பு நடப்பட்டுள்ளது. ஆனால் இரவு நேரத்தில் இந்த கம்பும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக அமையும் வாய்ப்பு உள்ளது.
மதன்குமார்,வாலிபாளையம்.
9876866801