சேதமடைந்த பயணிகள் நிழற்கூடம்

Update: 2026-05-17 18:36 GMT

திருப்பத்தூர் அருகே செவ்வாத்தூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசிக்கின்றனர். அந்தப் பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக உயர்நிலைப்பள்ளி அருகே பயணிகள் நிழற்கூடம் கட்டி கொடுக்கப்பட்டது. பயணிகள் நிழற்கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, அதில் உள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மூர்த்தி, செவ்வாத்தூர்புதூர்.

மேலும் செய்திகள்