குறிஞ்சிப்பாடி பகுதியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் மேற்கொண்டு பணிகள் ஏதும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் தோண்டப்பட்ட பள்ளத்தில் பொதுமக்கள் யாரேனும் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட பாதாள சாக்கடை பணியை மீண்டும் தொடங்கி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.