ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் வேகத்தடை இருந்தது. இதனால் அடிக்கடி விபத்து இல்லாமல் இருந்தது. இப்போது அந்த வேகத்தடையை அகற்றி விட்டனர். ஆனால் இப்போது அடிக்கடி விபத்து நடக்கிறது. மேலும் இதன் அருகில் மகளிர் பள்ளிக்கூடம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் இங்கு வேகத்தடை அமைக்கவேண்டும்.